Skip to main content

உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தாததால் தெருதெருவாய் அலையும் மக்கள்

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

 


வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் முதல் திருப்பத்தூர் வரை உள்ள 1000-க்கும் அதிகமான கிராமங்களில் 70 சதவித கிராமங்களில் குடிக்க, குளிக்க தண்ணீரில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். தினமும் குறைந்தது 10 இடங்களிலாவது போராட்டம், சாலைமறியல், அதிகாரிகள் முற்றுகையென நடக்கிறது.

 

t

 

ஆற்காடு தொகுதி, திமிரி அடுத்த நம்பரை கிராமத்தில் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கவில்லையாம். இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் கேட்டால் பி.டி.ஓ அலுவலகத்தை கைகாட்டுகிறார்களாம். பிடிஓ அலுவலகத்தில் நிதியில்லை நாங்க என்ன செய்வது என கைவிரிக்கிறார்களாம். இதனால் கடந்த 6 மாதமாக தண்ணீரில்லாமல் தவித்த பொதுமக்கள், ஜீன் 4ந்தேதி காலி குடங்களுடன் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பொதுமக்கள் கேட்கவில்லை.

 

ஒருநாள் தண்ணீரில்லாமல் நீங்கள் இருந்துப்பாருங்கள், அப்போ தெரியும் எங்க கஸ்டம். 6 மாதமாக விவசாய கிணற்று நீரை குடித்து வந்தோம். இப்போது அதுவுமில்லை. அதனால் மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் திமிறி போலிஸார் வந்து மிரட்டி அவர்களை கலைந்து போகவைத்தனர்.

 

அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, உள்ளாட்சி தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யாததால் மத்தியரசு, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தர வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. இதனால் உள்ளாட்சி நிர்வாகத்தை சிரமமாக உள்ளது.

 

உள்ளாட்சி நிதி இருந்திருந்தால் கோடைக்காலத்தில் வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய போர்வெல் அமைப்பது, விலைக்கொடுத்து குடிநீர் வாங்கி தருவது, புதிய கை பம்பு அமைப்பது, மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைப்பது என செயல்படுவோம். இரண்டு வருடங்களுக்கு முன்புவரை அப்படித்தான் செயல்பட்டோம், ஓரளவு குடிநீர் பிரச்சனையை சரி செய்தோம். இப்போது அப்படி செய்ய முடியவில்லை. அதற்கு காரணம் நிதியில்லாததே. வசூலிக்கப்படும் வரி போன்றவை சம்பளத்துக்கும், சின்ன பணிகளுக்கே போய்விடுகிறது. பிறகு எப்படி குடிதண்ணீர் பிரச்சனையை சரி செய்வது என்றார்கள்.


அதிமுக அரசாங்கம் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் ஏமாற்றியதன் விளைவு, மக்கள் குடிக்க கூட தண்ணீரில்லாமல் தவித்துக்கொண்டு உள்ளார்கள். 

சார்ந்த செய்திகள்