Skip to main content

திருச்செந்தூரில் இன்று வேல்யாத்திரை நிறைவு: ம.பி. முதல்வர் பங்கேற்பு!

Published on 07/12/2020 | Edited on 07/12/2020
ரக

 

 

கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவு பெற உள்ளது.

 

தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை பேரணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 6ம் தேதி திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை அறுபடை வீடுகள் வழியாக பயணித்து இன்று திருச்செந்தூர் வர இருக்கிறது. இன்றுடன் இந்த யாத்திரை நிறைவு பெற உள்ளதாக மாநில பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். நிறைவு நாளான இன்று ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இந்த யாத்திரையில் கலந்து கொண்டு விழாவை நிறைவு செய்ய உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேல் யாத்திரையின்போது கரோனா பரப்பிய குற்றத்துக்காக 135 பேர் மீது வழக்கு பதிவு! – உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. விளக்கம்!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020

 

Vel yatra case filed on 135 people

 

பா.ஜ.க. நடத்திய வேல் யாத்திரையின்போது,  பொது மக்களுக்கு 'கரோனா தொற்று' பரப்பியது போன்ற குற்றங்களுக்காக,  135 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக,  சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
 


சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வாராகி,   சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
 


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கரோனா பரவல் குறையும் வரை, தமிழகத்தில் எந்த  ஆர்ப்பாட்டத்துக்கும், போராட்டத்துக்கும், ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என,  காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.  ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் ஆர்பாட்டங்கள் நடந்ததைத் தொடர்ந்து,  காவல்துறையினருக்கு எதிராக வாராகி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

 


இந்த வழக்கில்,  காவல்துறை டி.ஜி.பி. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  ‘நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில்  ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு  காவல்துறை அனுமதி வழங்காதபோதும், நீதிமன்ற உத்தரவை மீறி  வேல் யாத்திரையை பாஜக மாநில  தலைவர் எல்.முருகன் நடத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.  காவல்துறையினரின் அனுமதி பெறாமல், பாஜக வேல் யாத்திரை நடத்தியது,  பொதுமக்களுக்கு கரோனா தொற்று பரப்ப காரணமாக இருந்தது.  பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதது, காவல்துறையினரிடம் தவறாக நடந்துகொண்டது, சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தது போன்ற குற்றங்களுக்காக,  இதுவரை பாஜகவினர் 135 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம்,  தமிழகத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதாக,  இதுவரை 1,241 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

Next Story

“வேல்யாத்திரை அவர்களுக்கு பாடத்தைக் கற்பித்தே தீரும்..” - எல்.முருகன்

Published on 08/12/2020 | Edited on 08/12/2020

 

L.Murugan bjp tamilndu leader speech at 'vel yatra' conclusion

 

தமிழக பா.ஜ.க. சார்பில் நவம்பர் 06-ல் அக்கட்சியின் தமிழக தலைவர் முருகன் வேல் யாத்திரை தொடங்கினார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரையிலான முருகனின் அறுபடை தலங்கள் வழியாக வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவித்தார். நவம்பர் 06 அன்று திருத்தணியில் வேல் யாத்திரையைத் தொடங்கியபோது கரோனாத் தொற்று காரணமாகக் கூட்டம் சேரக் கூடாது என்ற லாக்டவுன் தடை காரணமாக தமிழக அரசு வேல் யாத்திரையை அனுமதிக்கவில்லை. மாறாக முருகன், திருத்தணி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

 

தரிசனம் முடிந்து வேல் யாத்திரை கிளம்பிய முருகன் போலீஸாரால் தடுக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.

 

இறுதியாக, அறிவித்தபடி டிசம்பர் 06ஆம் தேதி வேல் யாத்திரை நிறைவு பெறும் என்று அறிவிப்பிற்கு ஏற்ப, அன்றைய தினம் திருச்செந்தூர் வந்த முருகன் அதிகாலை 7 மணியளவில் மூன்றரை அடி உயரத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேலுடன் ஆலயம் வந்து, அங்கு சண்முகரையும், முருகனையும் வழிபட்டுவிட்டு ஆலயத்தின் கொடிமரம் பக்கம் உள்ள உண்டியலில் வேலினை முறைப்படி கோவிலுக்குச் அர்ப்பணிக்கும் வகையில் செலுத்தினார். ஆனாலும், முறைப்படியான வேல் யாத்திரை நிறைவு விழா  மறுநாள் 7ஆம் தேதியன்று திருச்செந்தூரில் உள்ள கே.டி.எம். மண்டபத்தில் நடைபெற்றது.

 

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், முருகன், ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். காவல்துறையின் தடையையும் மீறி பா.ஜ.க.வினர் அக்கம் பக்க நகரங்களிலிருந்து சுமார் 3,000 பேர்கள் வரை திரட்டியிருந்தார்கள். தடை காரணமாக வெளியூரிலிருந்து வந்த வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்படவில்லை.

 

கூட்டத்தில் பேசிய பா.ஜ.க.வின் தலைவர் முருகன், “முருகக் கடவுளின் இந்த வேல் யாத்திரை எத்தனையோ இடர்பாடுகளைச் சந்தித்திருக்கிறது. அதை எல்லாம் தாண்டி பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டனும் இந்த வேல் யாத்திரையை நடத்திக் காட்டியிருக்கிறார்கள். தமிழ் கடவுளை விமர்சித்த அந்தக் கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க.வும் அதைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகளும் இருக்கின்றன. அந்த கருப்பர் கூட்டத்தை அடக்குவோம். எங்களின் உழைப்பு வீண் போகவில்லை. இதன் மூலம் அந்த கருப்பர் கூட்டத்திற்கும் கயவர் கூட்டத்திற்கும் ஆன்மீகப் பெரியோரும், பொது மக்களும், தொண்டர்களும் தக்கப் பாடம் கற்பிப்பார்கள். இந்த யாத்திரையில் பல கிலோ மீட்டர் கடந்து வந்திருக்கிறோம். இந்த வேல் யாத்திரை அவர்களுக்கு பாடத்தைக் கற்பித்தே தீரும்.” என்று பேசினார்.

 

ம.பி. முதல்வரான சிவராஜ் சிங் சவுகானோ, “மத்திய அரசு தமிழ்நாட்டுக்கான ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறது. கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி இருக்கிறது. அந்தக் கூட்டணி தோல்வியைச் சந்திக்கும்” என்றார்.