VCK struggle

Advertisment

மனு தர்ம நூல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக வலைதளத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில் இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகளிர் குலத்தை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை தடைசெய்ய வலியுறுத்தியும்,மனு தர்ம நூலை தடை செய்யக்கோரியும்விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில்வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக அவர்கள் போராட்டத்திற்கு நாற்காலிகள் அமைக்க முயன்றபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய விடுதலை சிறுத்தை கட்சியினர் அனுமதி பெற்று தான் அந்த போராட்டத்தை நடத்துகிறோம் எனக்கூறி நின்றபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment