Skip to main content

வேங்கைவயல் விவகாரம்; 6 மணி நேரமாக காவலர் ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை

Published on 23/05/2024 | Edited on 23/05/2024

 

Vangavayal issue; CBCID interrogated a police person for 6 hours

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற இழி செயலை மனித தன்மை கொண்டவர்கள் யாரும் செய்ய மாட்டார்கள். யாரோ மனிதத்தன்மையற்ற சமூக விரோதிகள் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேங்கை வயல், இறையூர் கிராம மக்களும், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை நடத்தினர்.

முதலில் புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் பிறகு நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நேரில் விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல், இறையூர் உட்பட பல கிராமங்களில் உள்ள சந்தேக நபர்களை அழைத்து விசாரணை செய்தனர். தொடர்ந்து செல்போன்கள் ஆய்வு, டிஎன்ஏ பரிசோதனை, குரல் பதிவு சோதனைகளும் நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக உறுதி செய்ய வேண்டியுள்ளது. விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று விசாரணை அதிகாரிகள் கூறி வந்தனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி உள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 11.10 மணிக்கு காவலர் முரளி ராஜா மற்றும் அவருடைய தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் வெளியே அமர வைக்கப்பட்ட நிலையில் காவலர் முரளி ராஜாவிடம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

nn

வேங்கைவயல் சம்பவத்தில் கனகராஜ் என்பவர்தான் முதன்முதலில் இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி  புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சட்டப்பிரிவு 277, 328 உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதே வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் 494 நாட்களாக விசாரணை செய்துள்ளனர். இச்சூழலில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இந்நிலையில் புதிய விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்ற கல்பனா விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளார். இந்த வழக்கில் ஏற்கெனவே விசாரிக்கப்பட்ட வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி இன்று விசாரணை நடைபெற்றது. பின்னர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் வரவழைக்கப்பட்டார். எதற்காக கிராம நிர்வாக அலுவலர் வரவழைக்கப்பட்டார் என்பது தொடர்பான விவரங்கள் தெரியாத நிலையில் தற்பொழுது வரை காவலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய மரணம்; மேலும் 6 பேர் கைது

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
counterfeiting liquor; 6 more arrested

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாபுரம் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பென்சிலால், சடையின், ரவி, செந்தில், ஏழுமலை, கவுதம் லால் ஜெயின் ஆகிய ஆறு பேரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கள்ளக்குறிச்சி சம்பவம்; பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Forgery incident The toll rises further

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் ராமர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதே சமயம் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கச்சிராபாளையம் போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர். 

Forgery incident The toll rises further

இத்தகைய சூழலில் கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதேஷ் நண்பர்களான பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மீன் வியாபாரி கண்னன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மாதேஷுக்கு மெத்தனால் கடத்த உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதன் என்பவர் உயிரிழந்துள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.