Skip to main content

‘வள்ளலார் 200’ முப்பெரும் விழா; சிதம்பரத்தில் கோலாகலம்!

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

vallalar festival celebrated in chidambaram!

 

சிதம்பரத்தில் வள்ளலார்-200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர்.

 

சிதம்பரத்தில் வள்ளலார் இவ்வுலகிற்கு வருகையுற்று 200-வது ஆண்டுத் தொடக்கம், அதேபோல் அவர் தருமசாலை தொடங்கி 156-வது ஆண்டுத் தொடக்கம் மற்றும் அவர் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் காலை அகல் ஜோதி ஏற்றப்பட்டு அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. பின்னர், சிதம்பரம் கீழ வீதியில் இருந்து கோலாட்டம், கும்மி உள்ளிட்ட ஆடல் பாடல்களுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சன்மார்க்க அன்பர்கள் பேரணியாக விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமைத் தாங்கி வள்ளலாரைப் பற்றி பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், சிதம்பரம் உதவி ஆட்சியர் ஸ்வேதாசுமன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல இணை ஆணையர்(பொறுப்பு) ஜோதி வரவேற்றுப் பேசினார். இதில் சன்மார்க்க நெறியாளர்கள் மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டனர். வள்ளலார் குறித்து நடைபெற்ற பேச்சு, ஓவிய, கட்டுரை, இசை, ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து வள்ளலார் குறித்து சீனிவாசன், அன்னபூரணி ஆகியோரால் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. முன்னதாக வடலூர், சிதம்பரத்தில் அன்னதானம் செய்துவரும் கோவை சிவப்பிரகாச சுவாமிகள் பேசுகையில், “காக்கை 4 மணிக்கு எழுந்து தினந்தோறும் குளித்து கிடைக்கும் உணவை மற்ற காகத்துடன் பகிர்ந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறது. பறவையினங்கள், விலங்கினங்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறது. அதேபோல் மனிதர்களும் வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, அவரின் போதனைகளை உலகிற்கு எடுத்துக் கூறி, எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில், கிடைக்கும் உணவுகளை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறி வள்ளலாரின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.

 

விழா காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கடலூர் மண்டல செயற்பொறியாளர் கலையரசு, உதவி கோட்ட பொறியாளர் அசோகன் மற்றும் பல்வேறு கோவில்களில் செயல் அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரம் தொகுதியில் ஆள் கிடைக்காததால் வேலூரில் இருந்து வேட்பாளரை இறக்கிய பாஜக!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
BJP dropped candidate from Vellore due to lack of candidates in Chidambaram constituency

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி போட்டியிடுகிறார்.  அதே போல் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்டவர்கள்.

இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் சரியான ஆள் இல்லாததால் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதபடுத்தி வந்தனர். சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பட்டியல் சமூகத்தில் சரியான ஆள் இல்லை என, வேலூரில் முன்னாள் அதிமுக மேயராக இருந்த கார்த்தியாயினியை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர்.  இது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர் வேலூர் மாநகராட்சி மேயராக 2011ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்த தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியவர். தேசிய அளவில் அப்போது சர்ச்சையானவர் இவர்.

பொதுவாக நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்பதை மறந்து மேயர் பொறுப்பில் இருந்தும் கார்த்தியாயினி மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றினர். அவரது உருவ பொம்மையையும் எரித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேயரின் செயல் சட்டத்திற்குப் புறம்பான செயல். நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்று கண்டனங்கள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மேயர் மன்னிப்பு கேட்க வேண்டும், அதை பத்திரிகை செய்தியாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மாநகராட்சிக் கூட்டத்தைக் கூட்டிய மேயர் கார்த்தியாயினி தீர்மானம் போட்டதற்காகவும்,  உருவ பொம்மையை கொளுத்தியதற்காகவும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின் பாஜகவில் சேர்ந்தார்.

பாஜகவுக்கு உள்ளூரில் ஒரு பட்டியலின வேட்பாளர் கிடைக்கவில்லை என   பாஜக தலைவர் அண்ணாமலையின் சிபாரிசால் வேலூர் தொகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளார் என்றும் அதே நேரத்தில் சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய கடலூர். அரியலூர், பெரம்பலூர்  மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக கட்சிக்காக பாடுபட்ட எவ்வளவோ உறுப்பினர்கள், தலைவர்கள் உள்ளனர். அவர்களை வேட்பாளராக அறிவிக்கலாம். ஆனால் தமிழக பாஜக தலைமை ஏதோ கணக்கு போட்டு  அறிவித்துள்ளது.  இருப்பினும் தலைமையின் கணக்கு இங்கு செல்லாது என  கட்சியினர் மத்தியில் அரச புரசலாக பேசப்பட்டு வருகிறதாம்.