Skip to main content

வந்தது 'வலிமை' ஃபர்ஸ்ட்லுக்- அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 11/07/2021 | Edited on 11/07/2021

 

 

Valimai film Official Motion Poster

நடிகர் அஜித்குமார் நடித்து வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வடிவில் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் 'வலிமை' அப்டேட் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது. 

 

பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட், கால்பந்து போட்டியில் 'வலிமை' அப்டேட் எதிரொலித்தது. இந்த நிலையில் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்த மோஷன் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் மிரட்ட வரும் சுந்தர்.சியின் அரண்மனை - 4

 

aranmanai 4 fist look released

 

சுந்தர்.சி இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'அரண்மனை' படம் சூப்பர் ஹிட்டடித்தது. அதில் ஹீரோவாகவும் சுந்தர்.சி நடித்திருந்தார். மேலும் ஹன்சிகா, ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. 

 

'அரண்மனை 2' படத்தில் சுந்தர்.சியுடன் சித்தார்த், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தைத் தொடர்ந்து வெளியான 'அரண்மனை 3' படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், கலவையான விமர்சனமே இப்படம் பெற்றது. இதையடுத்து அரண்மனை படத்தின் நான்காம் பாகம் உருவாகவுள்ளதாக இந்த வருட தொடக்கத்தில் தகவல் வெளியானது. அதில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஹன்சிகா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் நடிக்கவுள்ளதாகவும் லைகா தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளம் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகியதாகவும் கூறப்பட்டது. 

 

இந்த நிலையில், அரண்மனை - 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கி நடிக்கிறார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். போஸ்டரை பார்க்கையில், ஒரு பெண்மணி இரு குழந்தைகளுடன் அரண்மனையை நோக்கி நிற்கிறார். இதில், அடுத்தாண்டு பொங்கலன்று படம் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் இருக்கிறது. இப்போது இதுவும் இணைந்துள்ளது.  

 

 

 

Next Story

இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட "வா வரலாம் வா" பர்ஸ் லுக் போஸ்டர்!

 

First look poster release

 

எஸ்.ஜி.எஸ் கிரியேட்டிவ் மீடியா தயாரிப்பில், எல்.ஜி. ரவிசந்தர் - எஸ்பிஆர் இணைந்து "வா வரலாம் வா"  திரைப்படத்தை இயக்கியுள்ளனர். நாயகியாக மஹானா சஞ்சீவி, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். 40 குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லீ, சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா, காயத்ரி ரெமா, பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், திலீபன், பிரபாகரன், யோகிசாமி, ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

 

தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, காதல் மதி, எஸ்பிஆர், கானா எட்வின் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற ராஜா முகமது எடிட்டிங் செய்துள்ளார். 

 

இந்நிலையில், வா வரலாம் வா திரைப்படத்தின் பர்ஸ் லுக்  வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை 'அம்மா டாக்கீஸ்' ஸ்டுடியோவில்  நடைபெற்றது.நிகழ்ச்சியில், இப்படத்தின் கதாநாயகன் பாலாஜி முருகதாஸ், கதாநாயகி மஹானா சஞ்சீவி மற்றும் படத்தின் இயக்குநர்கள் எல்.ஜி. ரவிச்சந்தர் - எஸ்.பி.ஆர், படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா, இயக்குநர் சரவண சுப்பையா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.