
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் வடிவில் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் 'வலிமை' அப்டேட் எதிர்பார்ப்பு முடிவுக்கு வந்தது.
பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட், கால்பந்து போட்டியில் 'வலிமை' அப்டேட் எதிரொலித்தது. இந்த நிலையில் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த மோஷன் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.