Skip to main content

பயனில்லா மூலிகை பூங்கா..!

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் எதிர்வரும் சந்ததியினர் கற்று, கண்டு அறிந்து கொள்ள வேண்டிய அரசு மூலிகைப் பண்ணை, விளையாட்டு மைதானமாக, பொட்டல் காடாக உருமாறியுள்ளது.

 

herbal garden


சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசின் மூலிகைப் பண்ணை நிறுவப்பட்டுள்ளது. அங்குள்ள பெயர்ப்பலகை மட்டுமே மூலிகைப் பண்ணை என நமக்கு நினைவூட்டுகின்றது. எப்பொழுதும் தொங்கும் பூட்டு. உதவாத அடிகுழாய். காய்ந்து, பட்டுப் போன செடி கொடி மரங்கள் இவைகளை உள்ளடக்கியதுதான் இந்த மூலிகைப் பண்ணை. ஆட்சியர் அலுவலகத்தினுள் நுழையும் அதிகாரி, அமைச்சர் தொடங்கி மக்கள் எவரும் கண்டிப்பாக இதனைக் கடந்து செல்ல வேண்டும்.

 

herbal garden

 

எனினும் மாவட்ட நிர்வாகத்தின் பாராமுகத்தால் கோரமாக காட்சியளிக்கின்றது இந்த மூலிகைப்பண்ணை. நோய் மூலம் ஆரோக்கியத்தையும், பொருளாதாரத்தையும் இழக்காமல் இருக்க மூலிகை தாவரங்களை பற்றிய அறிவு அவசியம். மாவட்ட தலைநகரங்களில் பராமரிப்பு இல்லாமல் உள்ள மூலிகை பூங்காக்களை, ஆர்வம் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டும் அல்லது மாவட்ட நிர்வாகமே சிறந்த முறையில் பராமரித்து பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் கண்டு செல்லும் விதமாக காட்சிபடுத்திட வேண்டும். இதன் மூலம் மக்கள் அரோக்கியமாக வாழ வழி ஏற்படும் என்று அரசிற்கு கோரிக்கை விடுக்கின்றனர் சமுக ஆர்வலர்கள். செவி சாய்க்குமா மாவட்ட நிர்வாகம்?.

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கரோனாவை குணப்படுத்துகிறதா? - குடியரசு துணைத்தலைவர் வரை கவனம் ஈர்த்த ஆயுர்வேத மருந்து!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

ANDHRA HERBAL MEDICINE

 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு வேறு நோய்களுக்கான மருந்துகளே கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம் கிராமத்தில் போனிகி ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுதுவதாக தகவல் பரவியது.

 

மேலும் ஆந்திரா எம்.எல்.ஏ ஒருவரே தனது தொகுதிக்குள் குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துவதாக விளம்பரப்படுத்தி வருகிறார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், கரோனா கட்டுப்பாடுகளை மீறி மருந்து வாங்க குவிந்தனர். இதனால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதனையடுத்து ஆந்திர அரசு, குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துகிறதா என்பது குறித்து ஆராய, அதனை சோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் அனுப்பவும், மருந்தின் மூலக்கூறுகள் குறித்து ஆராய சித்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவையும் அனுப்ப முடிவு செய்தது.

 

அதேநேரத்தில் இந்த மருந்து குறித்து தகவலறிந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மருந்தின் செயல்திறன் குறித்து ஆராயுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தையும், மத்திய ஆயுஷ் அமைச்சரையும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஆந்திர அரசின் நிபுணர்குழுவுடன் இணைந்து ஆயுர்வேத மருந்தை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவ குழு ஆந்திராவிற்கு விரைந்தது.

 

இந்தநிலையில் மருந்தின் மூலப்பொருட்கள் கிருஷ்ணம்பட்டியிலிருந்து ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அதிகமான கூட்டம் கூடியதால் மருந்து விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

 

 

Next Story

மூலிகை சூப் வழங்கும் காங்கிரஸ் தலைவர்!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள் தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


  Herbal soup


அப்படி ஈடுபட்டுவரும் அவர்களுக்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தனது உணர்வுகள் என்ற அமைப்பின் மூலமாக, ஒவ்வொரு நாளும் புதிதாக காய்ச்சப்பட்ட மூலிகை சூப் நீரை போலீசார், தூய்மை பணியாளர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் நேரில் சென்று வழங்கிவருகிறார்.

இந்த மூலிகை சூப் பல்வேறு சித்த மருந்துகளால் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் களத்தில் பணியாற்றுவோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காகதான் தொடர்ந்து இந்த பணியை செய்து வருகிறோம் என கூறுகிறார் மக்கள் ராஜன். ஒவ்வொரு நாளும் சுமார் 1000 பேருக்கு மேல் இந்த மூலிகை சூப் நீரை கொடுத்து வருகின்றனர், இந்த அமைப்பினர்.