/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/456_2.jpg)
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குநர் ஆர்.மாதவன் இயக்கி 1972ம் ஆண்டு இப்படம் வெளியானது. வெள்ளி விழா கண்ட இப்படத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்பாகக்கொண்டாடப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/457_18.jpg)
பெரிய நடிகர்களின் புதிய படங்களுக்கு இருக்கும் அதே வரவேற்பு மீண்டும் திரையிடப்பட்ட இப்படத்திற்கும் இருந்தது. ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்துச் சென்றனர். சிவாஜி கணேசன் ரசிகர்கள் படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடலையும் நடனமாடிக் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் மற்றும் மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)