Skip to main content

பால்வாடி அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறு! -நக்கீரன் ஆக்‌ஷன் ரிப்போர்ட்!

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

​சென்னை ஆவடி ராமலிங்கபுரம் முதல் தெருவிலுள்ள குழந்தைகள் விளையாடும் அங்கன்வாடி மையத்தை ஒட்டியே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் உள்ளது என்ற அதிர்ச்சித்தகவல் நக்கீரனுக்கு கிடைக்க உடனே நாம் ஆக்ஷனில் இறங்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கொண்டு சென்று மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

 

 Unpacked bore well near Palwadi! - Nakkheeran Action Report!

 

ஆழ்துளை கிணற்றில் சிக்கியக் குழந்தையின் உயிரை மீட்க முடியாதது பொதுமக்களின் இதயங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இனியும் இப்படியொரு கொடூர மரணம் ஏற்படக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என ஒட்டுமொத்த மக்களும் கூக்குரல் கொடுத்துக்கொண்டிருக்க, ‘உங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் உள்ளனவா? புகைப்படம் மற்றும் முழுத்தகவலை  96770 81370 என்ற நக்கீரன் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அல்லது facebook.com/makkheeran/ பக்கத்தின் இன்பாக்ஸில் தெரிவிக்கலாம். நீங்கள் கொடுக்கும் தகவல், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு கொண்டுசெல்லப்படும்’ என்று அறிவித்திருந்தோம்.

தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மூடப்படாமல் கிடக்கும் ஆழ்துளை கிணறுகளின் இடம் மற்றும் புகைப்படங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் சமூக ஆர்வமுள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என பலரும்.  

 

 Unpacked bore well near Palwadi! - Nakkheeran Action Report!

 

இந்நிலையில், சென்னை ஆவடி பெருநகராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரம் முதல் தெருவில் குழந்தைகள் அதிகம் உலாவும் பால்வாடி எனப்படும் அங்கன்வாடி மையத்தின் அருகிலேயே ஆழ்துளைக் கிணறு மூடப்படாமல் உள்ளது என்று நமக்கு தகவல் கிடைக்க, நாம் உடனடியாக தாசில்தார் சரவணன் கவனத்துக்கொண்டுசென்றோம். அடுத்த சில மணிநேரங்களிலேயே, ‘வி.ஏ.ஓ. ஜெயப்பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க சொல்லிவிட்டேன். அதில், குழந்தைகள் வீழ்ந்துவிடாத அளவிற்கு உடனடியாக தற்காலிகமாக மூடிவிட்டோம். நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்துவிட்டேன்’ என்றார் நாம் தகவல் கொடுத்த சில மணிநேரங்களிலேயே. அவருக்கு, நன்றி சொல்லிவிட்டு வி.ஏ.ஓ. ஜெயப்பிரகாஷிடம் நாம் பேசியபோது,  ‘விரைவில் அந்த ஆழ்துளை கிணற்றில் மழை நீரை சேமிக்கும் விதமாகவும் குழந்தைகள் அதில் வீழ்ந்துவிடாமல் இருக்கவும் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இன்னும், எங்கெல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருக்கின்றனவோ அதெல்லாம் மூடும்வரை நக்கீரனின் இப்போராட்டம் தொடரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நகைக்கடைக்குள் புகுந்து ரூ.1.50 கோடி நகை கொள்ளை; புகைப்படங்கள் வெளியீடு

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Photos publised broke into a jewelery shop and stole Rs 1.50 crore worth of jewellery

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நகைக்கடைக்கு 4 மர்ம நபர்கள் காரில் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், நகைக்கடைக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 4 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.