Skip to main content

“தேர்தலில் திமுகவை ஆதரிக்கமாட்டோம்” - தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தலைவர்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Unless CM condemns aRasa, we will not field DMK in the elections says  V.J. Senthil Pillai

“வ.உ.சி குறித்து அவதூறு பேசிய ஆ.ராசாவை முதல்வர் கண்டிக்காவிட்டால்  நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை ஆதரிக்க மாட்டோம் என தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர். வி.ஜெ. செந்தில்பிள்ளை, “ சில நாட்களுக்கு முன் நாமக்கல்லில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஒட்டு மொத்த பிள்ளைமார் சமுதாயத்தையே இழிவு படுத்தும் வகையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஒருமையில் பேசியுள்ளார். வ.உ.சி.யை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம்.

இந்த நிலையில் சுதந்திரப் போராட்ட வீரரான வ.உ.சி. தனது மகனின் வேலைக்காக சிபாரிசு கடிதம் எழுதி பெரியாரிடம் கெஞ்சியதாக ஆ.ராசா பரப்பியுள்ளார். இது சுமார் இரண்டரை கோடி பிள்ளைமார் சமுதாயத்தினருக்கு மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஆ.ராசாவின் செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல் எந்த ஒரு சமுதாயத்தையும் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் பேசுவதைத் தடுக்க, தங்கள் கட்சியினரை கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறோம்.

வருகிற 25ஆம் தேதிக்குள் அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால், அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவோம். விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அந்தக் கட்சியை ஆதரிக்க மாட்டோம். அதன் விளைவை தேர்தலில் சந்திப்பார்கள். ஆ.ராசாவை முதலமைச்சர் கண்டிக்கவில்லை என்றால் தேர்தல் பிரசாரம் செய்ய அந்தக் கட்சியினர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவோம். கடந்த முறை எங்களுக்கு எதிராக அ.தி.மு.க. கட்சி செயல்பட்டதால் ஆட்சியை இழந்தனர். ” என்றார்.

சார்ந்த செய்திகள்