Skip to main content

மத்திய குழுவினர் இன்று ஆய்வு!

Published on 06/12/2020 | Edited on 06/12/2020

 

 

union government committee inspection at tamilnadu and puducherry over a cyclone

சென்னையில் இரண்டு குழுக்களாக பிரிந்து புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் இன்று (06/12/2020) ஆய்வு செய்கின்றனர். வேளச்சேரி ராம்நகர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி சுனாமி காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். மேற்கண்ட மூன்று இடங்களில் ஆய்வு செய்த பிறகு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசிக்கிறது மத்திய குழு. 

 

மகாபலிபுரம் வழியாக இன்று பிற்பகல் புதுச்சேரிக்கு செல்லும் முதல் குழு அங்கு நாளை (07/12/2020) ஆய்வு செய்யவுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளமத்திய குழுவினர் வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்யவுள்ளனர். நாளை (07/12/2020) வேலூர், திருப்பத்தூரில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சேதங்களை ஆய்வு செய்கிறது மத்திய குழு. 

 

டிசம்பர் 8- ஆம் தேதி வரை தமிழகத்தில் புயல் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். டிசம்பர் 8- ஆம் தேதி சென்னையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு டெல்லி செல்லும் மத்திய குழு, சேதங்களை கணக்கீட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதியை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மத்திய குழுவில் யார்? யார்? 

மத்திய உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையிலான மத்திய குழுவில் வேளாண் இயக்குநர் மனோகரன், நெடுஞ்சாலைத்துறை மண்டல அலுவலர் ரனஞ்ஜெய்சிங், நிதித்துறை (செலவினம்) பார்த்தெண்டு குமார் சிங், மின்துறை இணை இயக்குநர் சுமன், மீனவள ஆணையர் பால் பாண்டியன், நீர்வள இயக்குநர் ஹர்ஷா, கிராமிய வளர்ச்சி இயக்குநர் தர்மவீர்ஜா ஆகியோர் உள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.