Skip to main content

அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ஸில் அடைமழை... பயணிகள் அவதி!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

 Ultra deluxe bus... Passengers suffer!

 

அல்ட்ரா டீலக்ஸ் எனப் பெயரிடப்பட்ட அரசுப்பேருந்தில் மழை பெய்த நேரத்தில் பேருந்துக்குள் மழை நீர் புகுந்ததால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

 

திருப்பத்தூரிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணிக்கு சென்னைக்கு அல்ட்ரா டீலக்ஸ் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் மேற்பரப்பிலிருந்து ஆங்காங்கே இருக்கைகளில் மழை நீர் கசிய தொடங்கியது. இதனால் பயணிகள் மழையில் நனையும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருக்கை முழுவதும் ஈரமானதால் வாணியம்பாடி நியூட்டன் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகள் இறங்கி பேருந்துக்கு முன் நின்றனர். 

 

மேலும், " வேலூருக்கு செல்ல சாதாரண பேருந்தில் 70 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் 95 ரூபாய் வசூலிக்கப்படுகிறது, இப்படி மழையில் நனைந்து செல்வதற்குத்தான் கூடுதல் கட்டணமா? எனப் பயணிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மாற்று பேருந்து ஏற்பாடு செய்தால் மட்டுமே நாங்கள் தொடர்ந்து செல்ல முடியும் எனக் கூறி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.