Skip to main content

ஹெலிகாப்டர் விபத்து; உக்ரைன் உள்துறை அமைச்சர் பலி

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

ukraine capital kyiv nearest nursery school helicopter incident 

 

உக்ரைன் தலைநகர் கியூவ் நகரில் உள்ள மழலையர் நர்சரி பள்ளி அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் உக்ரைன்  நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி மற்றும் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து உக்ரைன் நாட்டின் காவல் துறையின் தலைமை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "அரசின் சார்பில் அவசர சேவைக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த நாட்டின் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, நாட்டின் முதன்மை துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின், கிளிவ் மாகாண ஆளுநர் ஒலெக்ஷ்ய், உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 18 பேர் இதுவரை இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளனர், மேலும் 15 குழந்தைகள் உட்பட 29 பேர் இந்த விபத்தில்  காயமடைந்து உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள்  நடைபெற்று வருகின்றன" தெரிவிக்கிறது.

 

இந்த ஹெலிகாப்டர் விபத்து  தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ காட்சி ஒன்று பார்ப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்குத் தயார், ஆனால்...” - கண்டிஷன் போட்ட ரஷ்ய அதிபர்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Russian President Ready for a cease-fire with Ukraine

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த மே 7ஆம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச  செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில் உக்ரைன் இதைச் செய்தால் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் உரையாற்றிய விளாடிமிர் புதின் கூறியதாவது, “கெய்வ் பகுதி உள்ளிட்ட நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிராந்தியங்களிலிருந்து துருப்புக்களை வாபஸ் பெற்றால், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் சேரும் திட்டத்தைக் கைவிட்டால் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு உத்தரவிடத் தயார். நாங்கள் அதை உடனடியாக செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா தயார்?

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
Russia ready for ceasefire with Ukraine?

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே, ரஷ்ய அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் விளாடிமிர் புதின், 5வது முறையாக அதிபராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையைப் படைத்தார். இந்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக சர்வதேச  செய்தி நிறுவனங்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனம் கூறுகையில், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதை சில ஐரோப்பிய நாடுகள் தடுப்பதாக புடின் கருதுவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கும் ரஷ்யா அதிபர் புதின் தயாராக இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளது.