திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் குளிக்க பள்ளி மாணவர்கள் சிலர் சென்றுள்ளனர். இதில் தண்ணீரில் இறங்கிய சந்துரு (12), இனியன் (10) ஆகிய இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்குச் சென்றதால் சேற்றில் சிக்கி மாணவர்கள் இருவரும் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக ஊத்துக்குளி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த இரண்டு பள்ளி மாணவர்களின் உடலையும் கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். குளிக்க இறங்கிய இரண்டு பள்ளி மாணவர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் 10 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்றபோது அதில் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று திருப்பூரில் இப்படியொரு சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.