
வேலூரில் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் மொகிலி (39) என்பவர் கட்டிட கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவரது வீட்டில் நாளை நடக்கும் நிகழ்ச்சிக்காக வீட்டின் மாடியில் பந்தல் அமைக்க மொகிலி முன்றுள்ளார். அவரது உறவினரான பெங்களூரை சேர்ந்த கிஷோர் (22) என்பவரும்மோகிலியும்இரும்பு பைப்புகளை மாடிக்கு எடுத்துச் சென்றனர். அப்போது உயரழுத்த மின் கம்பி இரும்பு பைப் மீது உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)