Two girls falling into the toilet tank-Tragedy in Pannayapuram

தேனியில்கழிவறை தொட்டியில் தவறி விழுந்து இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணையபுரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகள் நிகிதா ஸ்ரீயும் அதே பகுதியில் சேர்ந்த சுபஸ்ரீ என்ற சிறுமியும் அருகே இருந்த கழிவறை தொட்டியின் மீது அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த தொட்டியின் சிமெண்ட் மூடி பழுதாகி இருந்த நிலையில் மூடி நொறுங்கி தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதனால் இரண்டு சிறுமிகளும் அப்படியே கழிவறை கால்வாய்க்குள் விழுந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் செல்லும் வழியிலேயே ஒரு சிறுமி உயிரிழந்தார். சிகிச்சைக்கு பின்னர் மற்றொரு சிறுமி உயிரிழந்தார்.

Advertisment

Two girls falling into the toilet tank-Tragedy in Pannayapuram

கழிவறை தொட்டியின் மூடி பழுதாகி இருந்த நிலையில் பலமுறை அதை மாற்றிக்கோரிமனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு சிறுமிகள் கழிவறைதொட்டிக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.