two trip arrives delhi tamilnadu cm edappadi palaniswami

இரண்டு நாள் பயணமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க இரண்டு நாள் பயணமாக ஜனவரி 18- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். முதல்வருடன் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளும் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரங்களில் தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்கவுள்ளது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.