Two children passes away while bathing in river

புதுச்சத்திரம் அருகே பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சேர்ந்த ராயர் என்பவரின் மகள் தார்னிஷா (11) அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் மகாலட்சுமி (9), இவர் 4ஆவது படிக்கிறார். இவர்கள், பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுடன் கிராமத்தின் அருகே ஓடும் 'கழுத்தை வெட்டி' வாய்க்காலில் வெள்ளிக்கிழமை மதியம் குளிக்கச் சென்றனர்.

Advertisment

அப்போது தார்னிஷா, மகாலட்சுமி இருவரும் வாய்க்காலில் இறங்கியபோது தவறி விழுந்துள்ளனர். இதனை அறிந்த, அவர்களுடன் சென்ற சிறுமிகள் பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளனர்.

Advertisment

இதனைக் கண்ட அருகில் இருந்த இளைஞர்கள், வாய்க்காலில் குதித்து சிறுமியைத் தேடித் தூக்கியுள்ளனர். அப்போது இருவரும் பலியாகியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலைக் கைப்பற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.