Skip to main content

விளையாட சென்ற இரண்டு சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி..!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

Two boys who went to play floated in the lake ..!

 

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாடச் செல்லும் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள்  ஏரி குளங்களில் மூழ்கி இறப்பது தொடர் சம்பவமாக நடைபெற்று வருகிறது. அதைப்போன்ற சம்பவம் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்துள்ளது.

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வாலிஸ்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் லெனின். இவரது மகன் ஐந்து வயது கவின். அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்ராயர், இவரது எட்டு வயது மகன் சஞ்ஜய். இந்த இரு சிறுவர்களும் நேற்று (15.04.2021) மாலை அதே பகுதியில் உள்ள கொக்கட்டை ஏரிக் கரையில் விளையாடிக்கொண்டிருந்தனர். மாலை 5 மணி அளவில் இருவரும் ஏரியில் இறங்கி குளிக்கச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாததால் இரண்டு சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். தற்செயலாக அப்பகுதியில் சென்றவர்கள், இரண்டு சிறுவர்களும் தண்ணீரில் மிதப்பதைப் பார்த்துக் கூச்சலிட்டுள்ளனர்.

 

அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று சிறுவர்களை மீட்டு, கரைக்குத் தூக்கிவந்து பார்த்தபோது அவர்கள் இறந்துபோனது தெரியவந்துள்ளது. இதுபோன்று விளையாடும்போது அவர்களை அறியாமலேயே சிக்கலில் மாட்டி உயிர் துறக்கிறார்கள் குழந்தைகள். எனவே பிள்ளைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.