ttv 5

டிடிவி தினகரன் அணி தரப்பில் 3 பெயர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

Advertisment

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது விசாரணை இன்று நடைபெற்றது. அந்த விசாரணையில் தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு முடியும் வரை தங்கள் அணிக்கு ஒரு பெயரை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Advertisment

அதன்படி, அனைத்திந்திய அம்மா அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிடர் முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் ஆகியவற்றில் ஒரு பெயரையும், பிரஷர் குக்கர் சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டிடிவி தினகரன் அணி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இல்லாத நிலையில், அவர்களுக்கு எப்படி பெயரை அளிக்க முடியும் என தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது. தினகரன் அணிக்கு பெயரை அளிக்க எதிர்ப்பு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர், இந்த இடைக்கால மனுவிற்கு அவசியமே கிடையாது என்று தெரிவித்தனர்.

Advertisment