ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகும் தூக்க மாத்திரை கொடுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர் இரு பெண்கள். இவர்கள் மூவரும் சென்னையை சேர்ந்த யாத்ரீகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/M33.jpg)
சென்னை தென் பழனி நகர் கொளத்தூரை சேர்ந்த தாய் மகள் மற்றும் 2 வயது பேத்தி உட்பட மூவர் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்களை யாத்ரீகர்களாக பதிவுசெய்து அறையை எடுத்தவர்கள், காலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அறைக்கு திரும்பியிருக்கின்றனர். மதிய சாப்பாட்டிற்கு வெளியே வராததால் சந்தேகமடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் கதவை தட்டி திறக்க, 2 வயது குழந்தைக்கும் தூக்க மாத்திரையை கொடுத்தவர்கள், தாங்களும் உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. ஊழியர்களின் தகவலின் பேரில் விசாரணை செய்த காவல்துறை உடனடியாக அவர்களை மீட்டு மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது. குடும்ப பிரச்சினைக் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)