
அமெரிக்காவைச் சேர்ந்த குசனட் என்பவர் ராஜபாளையம், நல்லமநாயக்கன்பட்டி, புதுப்பாளையத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் குடியிருந்து வருகிறார். அங்கு யோகா மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.
இவர் ராஜபாளையம் டவுனில் உள்ள அமெரிக்க பன்னாட்டு நிதி நிறுவனமான வெஸ்டர்ன் யூனியனுக்கு வந்து பணம் எடுத்து, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, தான் வசிக்கும் நித்தியானந்தா ஆசிரமத்துக்கு திரும்பியிருக்கிறார். அப்போது கோதைநாச்சியார்புரம் விலக்கு பாலம் அருகில் அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரிடமிருந்து பாஸ்போர்ட் மற்றும் பணத்தைப் பறிக்க முயன்றுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிய குசனட் ராஜபாளையம் தெற்கு காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.