Skip to main content

ஸ்டேஷனுக்குள் புகுந்து திருடர்கள் 'கைவரிசை' - உதவிய இன்ஸ்பெக்டர்!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

trichy vathalai police station issue

 

தமிழகத்தில் பெரும்பாலான காவல்நிலையங்களில், பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய டூ-வீலர்களின் மீதான வழக்குகள் முடிக்கப்படாத நிலையில் உள்ளன. அதேபோல, திருச்சி வாத்தலை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 36 டூ-வீலர்களின் உதிரிபாகங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக திருடப்பட்டு வந்துள்ளது.

 

இந்த உதிரி பாகங்கள் அனைத்தையும் திருடிய 2 நபர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் துறை அதிரடியாக சோதனை நடத்தினார்கள். திருடப்பட்டிருந்த அனைத்து வாகனங்களின் உதிரி பாகங்களையும் மீண்டும் காவல் நிலையத்தில் உள்ள வாகனங்களில் பொறுத்தச் சொல்லி திருடிய இரண்டு திருடர்களையும் வழக்குப்பதிவு செய்யாமல் வாத்தலை காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களை தப்பிக்கவைத்துள்ளார். 

 

இச்சம்பவம் குறித்து விசாரித்ததில் காவல் ஆய்வாளர் கைதுசெய்த ரஜினி மற்றும் முருகன் இருவரும் இதுபோன்று தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்களுக்கு உறுதுணையாகக் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அவர்களிடம் தலா 20 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு,  தப்பித்துச் செல்லவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

வாத்தலை காவல்நிலையத்தில் திருடர்களை தப்பிவிட்ட விவகாரத்தில் ஆய்வாளர், எஸ்.ஐ. இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் மணிவண்ணன், எஸ்.ஐ.செல்லப்பாவை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி எஸ்.பி. உத்தரவிட்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பைக் மீது தீராத காதல்-15 பைக்குகளை திருடிய சிறுவன் கைது

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Unrequited love for bikes-17-year-old boy arrested for stealing many bikes

17 வயதில் எண்ணற்ற வண்டிகளை திருடிய சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேலையம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயதாகும் ஆர்யா பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சிறுவன் என்றுகூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சூர்யா போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். சில மாதங்களாக அங்கு இருந்தவன் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கடலூர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து ரிலீஸ் ஆனான். வெளியே வந்தவன் மீண்டும் பைக் திருட்டில் ஈடுப்பட்டுள்ளான். கடலூர், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் மூன்று வண்டிகளையும் திருவண்ணாமலையில் 15 வண்டிகளும்  திருடியதாக தெரிய வருகிறது.

மார்ச் 7 ஆம் தேதி காலை 7 மணி அளவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்பரசு தலைமையில் திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோடு அங்காளம்மன் கோயில் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த நிலையில் அழைத்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளான்.

தொடர் விசாரணையில் பைக் திருடன் என்பது தெரிய வந்த நிலையில் திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டான். இந்த சிறுவனுக்கு பைக் மீது தீராத காதல் இருந்துள்ளது. திருடிச் செல்லும் பைக்கை விற்பனை செய்யாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துள்ளான். அவன் விருப்பப்படும் போது மட்டும் விரும்பிய பைக்கை எடுத்து ஓட்டிவிட்டு மீண்டும் பாதுகாப்பாக தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டு இருந்துள்ளான். இந்த தகவலை அவன் சொன்னதும் போலீசார் ஆச்சரியமடைந்துள்ளனர். அவன் திருடிய 15 பைக்குகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். பைக் திருடு போனதாக புகார் தந்தவர்களை வரவைத்து ஆவணங்களை சரிபார்த்து அந்த பைக் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வழக்கமாக பைக் திருடுபவர்கள் உடனடியாக அதனை வேறு ஒருவருக்கு விற்பதும் இல்லையென்றால் ஸ்பேர் பார்ட்ஸ்களை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்பதை தான் இதுவரை காவல்துறையினர் கேள்வி பட்டுள்ளனர். ஆனால் பைக் மீது கொண்ட காதலால் விரும்பிய பைக் திருடிக் கொண்டு போய் வீட்டிலேயே பத்திரமாக வைத்து அதை சுத்தம் செய்து பளபளப்பாக வைத்துக் கொண்டிருப்பவனை நினைத்து காவல்துறையினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Next Story

கடலூர் மாவட்டத்தில் 14 இருசக்கர வாகனங்கள் திருட்டு: மூன்று பேர் கைது

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Three arrested for stealing 14 motorcycles in Cuddalore district

 

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 14 இருசக்கர மோட்டார் வாகனங்கள் திருடி விற்பனை செய்த மூன்று பேரை சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடு போனது. இதனையடுத்து வாகன திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் உத்தரவிட்டார். சிதம்பரம் டிஎஸ்பி (பொறுப்பு) நாகராஜ் நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் சிதம்பரம், புவனகிரி பகுதியில் சிசிடிவி கேமரா மூலம் இரு வாகனங்கள் திருடியவர்களை அடையாளம் கண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விருத்தாசலம் தாலுக்கா பெரியாகுறிச்சி புதுநகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் கலைவாணன் (23) என்ற வாலிபர் சிதம்பரம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, விருத்தாசலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 14 இரு சக்கர மோட்டார் வாகனங்களை திருடியது தெரியவந்தது.

 

Three arrested for stealing 14 motorcycles in Cuddalore district

 

மேலும் இவர் வாகனங்களை திருடி புவனகிரி தாலுகா சின்னகுமட்டி கிணற்றங்கரை தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் என்.நிதீஷ்குமார் (25), சின்னகுமட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுந்தரம் மகன் சூர்யா (21) ஆகியோர் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீஸார் மேற்கண்ட மூவரையும் வாகன தணிக்கையின் போது செவ்வாய்க்கிழமை அன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் 14 மோட்டார் சைக்கிள்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.