Published on 26/11/2021 | Edited on 26/11/2021

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருவதால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கோரை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துள்ளது.
கோரை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தீரன் நகர், கருமண்டபம், பொன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், அப்பகுதிகள் வெள்ளத்தால் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகளின் இரு பக்கங்களிலும் கரைபுரண்டு மழை நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துவருகின்றனர். கனரக வாகனங்களும் தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.