/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_151.jpg)
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 23 உறையூர், பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேயர் மு. அன்பழகன், மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற்பொறியாளர், ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், உதவி ஆணையர் சதீஸ்குமார் ஆகியோருடன் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். மேலும் பொது மக்களுக்கு இடையூறு இன்றி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்கள்.
பின்னர் அண்ணாநகர் இணைப்புச் சாலை உய்யக்கொண்டான் கரையில் திறந்தவெளி உடற்பயிற்சி நிலையத்தை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று இன்று, மேயர் மு. அன்பழகன் நேரில் பார்வையிட்டு சிதிலமடைந்த உடற்பயிற்சி கருவிகளை புதிதாக மாற்றித் தரவும், அலங்கார மின்விளக்குகள் அமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 2சப் ஜெயில் சாலையில் புதிதாக அமைக்கப்படுகிற சாலையை மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மண்டலம் 2, வார்டு எண் 17, வேதாத்திரி நகரில் பூங்கா மராமத்து பணி நடைபெற்று வருவதை மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)