திருச்சி லலிதா ஜூவல்லரியில் ஏறத்தால 100 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வடஇந்திய கொள்ளையர்களா? கொள்ளையில் நகைக்கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? பழைய கொலையாளிகள் தற்போது நகைக்கொள்ளையர்களாக மாறிவரும் சிலரையும் சந்தேக வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் காவல்துறையினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 இன்ஸ்பெக்டர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. 7 விதமான தகவல்களை சோதனை செய்வதற்காகன வேலைகளை முடுக்கி விடப்படுள்ளது காவல்துறை. திருச்சி மாநகரில் உள்ள அத்தனை விடுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று மாலை விடுதிகளை காலி செய்தவர்களின் பட்டியல் தயாரித்து அவர்களை விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நகைக்கடை தரை தளத்தில் உள்ள ஷோகேஸ்களில் மொத்த நகைகளையும் ஒன்று விடாமல் துடைத்து எடுத்து சென்றதால், வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு அமர் ஜூவல்லரியில் இதே போன்று இரவு நேரத்தில் கடையை உடைத்து மொத்த நகைகளையும் எடுத்து சென்ற சம்பவத்தை ஒப்பிடுகிறார்கள் காவல்துறையினர்.
கொள்ளை குறித்து திருச்சி மாவட்ட எஸ்.பி. கடந்த ஆண்டு சமயபுரம் பஞ்சாப்நேஷனல் வங்கியில் துளை போட்டு லாக்கரில் இருந்து 5 கோடி நகைகளை எடுத்த சம்பவம் போன்றே இந்த, கொள்ளையும் நடந்துள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என்றார்.
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், துணை ஆணையர்கள் நிஷா, மற்றும் மயில்வாகணன் ஆகியோருடன் காலையில் இருந்து அந்த கடையின் முழுவதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.மேலும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேல், கோசல்ராமன், மதன், பெரியய்யா மற்றும் ஏ.சி. கோபாலசந்திரன், கியூ பிரிவு டி.எஸ்.பி மணிகண்டன் என ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திலும், திருச்சி மாநகர முழுவதும் அதிரடி காட்டி வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக திருச்சி வந்த லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண் கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டு வந்தவர். அப்போது அவர் கூறுகையில், காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதிதீவிரம் காட்டும் காவல்துறை கொள்ளையடித்த குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார்.