கரோனா வைரஸ் பிரச்சனையில் நாடே வாழ்வதற்கு போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், திருச்சியில் தான் வளர்த்த கோழிகளைக் கொன்றதாக நினைத்து பூனைகளைக் கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ttt

திருச்சி மாவட்ட லால்குடி சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் ஜெயக்குமார். இவர்கள் இதே பகுதியில் உள்ள உத்தமனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

விலங்குகள் மேல் பிரியரான இவர் தனது வீட்டில் 18 பூனைகள் வளர்த்து வந்தார். இவரது பக்கத்துவீட்டுகாராரான அமமுக நகர செயலாளர் பாலசுப்ரமணியன் தன் வீட்டில் கோழிகளை வளர்த்து வந்தார்.

nakkheeran app

Advertisment

இந்த நிலையில் பாலசுப்ரமணியன் வீட்டு கோழியை, ஒரு நாய் கடித்து கொன்றது. இதையறியாத பாலசுப்ரமணின், ஜெயக்குமார் வளர்த்த பூனைகள்தான் கோழியைக் கடித்து கொன்றதாக நினைத்து உணவில் விஷம் வைத்து பூனைகளுக்கு வைத்தார்.

அதை சாப்பிட்ட மருத்துவர் ஜெயக்குமாரின் பூனைகள் உயிரிழந்தன. இதை அறிந்து கொதிப்படைந்த டாக்டர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பெயரில் லால்குடி போலிசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.