/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-police-art_10.jpg)
திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தகைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பாலநகர் கே.ஆர்.எஸ்.வீதி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021 அக்டோபர் முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சிறை அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராமச்சந்திரன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி கண்ணன் கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)