
உலகத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில், 275 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இக்கோர சம்பவம் நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பாலக்கரை உழவர் சந்தை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறை சேர்ந்த செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டனர்.