
ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பாபநாசம் செல்வதற்காக ஏறிய இளைஞர் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். சீர்காழிக்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்த பொழுது படிக்கட்டில் அமர்ந்து கொண்டு இருந்து பயணம் செய்த அந்த இளைஞர் தடுமாறி கீழே விழுந்தார். ஆனால் யாரும் கவனிக்காமல் விட்டனர். திடீரென உடன் வந்தவர்கள் தங்களுடன் வந்தஇளைஞரை காணவில்லை என மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஆற்றின் மணல் பரப்பில் இளைஞர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இளைஞரின்உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த அப்பாஸ் என்பது தெரியவந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)