
தமிழகத்தில் அண்மையாகவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி அறிவியல் நகரத் திட்டத்துணைத் தலைவராக தேவ் ராஜ் தேவ் நியமிக்கப்பட்டுள்ளார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக அருண் ராய்நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக ஆகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நிஷாந்த் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)