Skip to main content

“தியேட்டர்ல வந்தாதான் பெரிய நட்சத்திரங்களுக்கு மாஸு; ஃப்ளாட்ஃபார்ம்ல கிடைக்கும் சார் காசு” - டி.ராஜேந்தர் ஆவேசம்...

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

T.Rajendar press meet about OTT

 

 

சென்னை  தி.நகர் மாசிலாமணி தெருவில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் ஓடிடி குறித்து பேசும்போது, “வண்ணத்திரையில் வந்தால்தான் பெரிய நட்சத்திரங்களுக்கு மாஸு; ஃப்ளாட்ஃபார்ம்ல கிடைக்கும் சார் காசு, சின்னத்திரை வந்தபோது வண்ணத்திரை அழிந்துவிடவில்லை, அதுவும் ஒரு வருமானம் அவ்வளவுதான். ஓடிடிகளில் சின்ன படங்களை வாங்க மாட்டேங்கிறாங்க. திமிங்கலம் தான் வாழனுமா, சின்ன மீன்கள் எல்லாம் வாழக்கூடாதா” என்று கேள்வி எழுப்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

‘விமர்சனம்; விமோசனம்’ - தனது ஸ்டைலில் பதிலளித்த டி. ராஜேந்தர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
t.rajendar about vijay political entry

விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார்.

கட்சி பெயர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒருபுறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர், செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “அரசியல் என்பது பொது மொழி. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய் வரட்டும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரை பற்றிய கேள்விக்கு இப்போது நான் பண்ணவில்லை விமர்சனம். கடவுள்கிட்ட கேட்கிறதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டும் விமோசனம்” என்றார்.