Skip to main content

எழும்பூரில் ரயில்களின் நேரம் மாற்றம்!

Published on 01/10/2021 | Edited on 02/10/2021

 

Train timings change in Egmore!

 

சென்னை சென்ட்ரலைத் தொடர்ந்து எழும்பூருக்கு வரும், புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, "திருச்செந்தூர் செல்லும் செந்தூர் விரைவு ரயில் மாலை 04.00 மணிக்குப் பதில் 04.05 மணிக்குப் புறப்படும்.  எழும்பூர் - தூத்துக்குடி செல்லும் முத்துநகர் அதிவிரைவு ரயில் இரவு 07.35 மணிக்குப் பதில் 07.30 மணிக்குப் புறப்படும். மலைக்கோட்டை ரயில் 04.15 மணிக்குப் பதில் 04.10 மணிக்கும், உழவன் ரயில் 04.30 மணிக்குப் பதில் 04.25 மணிக்கும் எழும்பூரை வந்தடையும். 

 

பாண்டியன் 05.15 மணிக்குப் பதில் 05.10 மணிக்கும், சிலம்பு 05.30 மணிக்குப் பதில் 05.20 மணிக்கும், பொதிகை ரயில் 06.00 மணிக்குப் பதில் 05.50 மணிக்கும் வரும். கன்னியாகுமரி ரயில் 06.15 மணிக்குப் பதில் 06.10 மணிக்கும், அனந்தபுரி ரயில் 08.05 மணிக்குப் பதில் காலை 08.00 மணிக்கும் எழும்பூர் வரும். திருச்செந்தூர் ரயில் காலை 10.45 மணிக்குப் பதில் 10.30 மணிக்கும், வைகை ரயில் மதியம் 02.35 மணிக்குப் பதில் 02.30 மணிக்கும் எழும்பூர் வரும். திருச்சி சோழன் விரைவு ரயில் மாலை 04.50 மணிக்குப் பதில் மாலை 04.40 மணிக்கு எழும்பூரை வந்தடையும்" என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயர்வு'- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

'Rail platform ticket fare hike'- Southern Railway Notice!

 

தெற்கு ரயில்வே இன்று (29/09/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழாக் காலங்களில் கூட்டத்தைத் தவிர்க்க, சென்னை கோட்டத்திற்குட்பட்ட டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் உள்ள ரயில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூபாய் 10- லிருந்து ரூபாய் 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

இந்த கட்டண உயர்வானது வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேவின் இத்தகைய அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

 

Next Story

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- தேனி இடையே தினசரி ரயில்! 

Published on 24/05/2022 | Edited on 24/05/2022

 

Daily train between Madurai and Theni after 12 years!

 

12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை- தேனி இடையே தினசரி ரயில் சேவை தொடங்கப்படவிருப்பதால், அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

வரும் மே 26- ஆம் தேதி அன்று சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை- தேனி இடையேயான தினசரி ரயில் சேவையைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதற்கு மறுநாள் காலை 08.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்கள் வழியாக, 09.35 மணிக்கு தேனி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதேபோன்று, மறு மார்க்கமான தேனியில் மாலை 06.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 07.35 மணிக்கு மதுரை வந்தடையும். தினசரி இந்த சேவை வழங்கப்படவிருப்பதால், கல்வி மற்றும் பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் ஏராளமானோர் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.