/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bt-art.jpg)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு விட்டு இன்று மதியம் 2.30 மணியளவில் பேசின்பிரிட்ஜ் ரயில் பணிமனைக்குச்சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயில் பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள், தடம் புரண்ட ரயில் பெட்டியின் சக்கரத்தை தண்டவாளத்திற்கு உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் ரயில் தடம் புரண்ட சம்பவம் ரயில்வே துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)