Skip to main content

ஆசிரியர் தம்பதி 3 குழந்தைகளுடன் எடுத்த விபரீத முடிவு; விசாரணையில் அதிர்ச்சி

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
A tragic decision taken by a teacher couple with 3 children; shock in the investigation

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்களான தம்பதி மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது திருத்தங்கல் பாலாஜி நகர். அங்கு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் லிங்கம். அவருடைய மனைவி பழனியம்மாள். அவரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஆதித்யா, ஆனந்தவல்லி, சசிகா ( 2 மாத குழந்தை) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வீட்டில் நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணவன் மனைவி தூக்கில் தொங்கியபடி கிடந்தனர். குழந்தைகள் மூவரும் விஷம் கொடுக்கப்பட்டு இறந்து கிடந்தனர். ஐந்து பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடன் தொல்லையால் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்