/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_234.jpg)
தஞ்சாவூர் வடக்கு வீதியைச் சேர்ந்தவர்கள் கருணாநிதி - பிரேமாவதி தம்பதியினர். இவர்களுக்கு சுதாகர் என்ற மகனும் சுகன்யா(30) என்ற மகளும் உள்ளனர். மகள் சுகன்யாவுக்கு திருமணம் ஆகாத நிலையில் அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் பிரேமாவதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் சுகன்யா மிகுந்த மன வேதனையில் இருந்து வந்திருக்கிறார். அதிகமாகப்பாசம் வைத்த தாய் இறந்துவிட்டதால், சுகன்யா அன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு இரவு நேரத்தில் வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுகன்யாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)