Tragedy happened to the old man who went to bathe

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தாலுகா, அந்தியூர் அடுத்த வட்டலபதி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணப்பன் (79). இவர் மகன் ஆனந்தராஜ் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியுடன் கடந்த 6-ந் தேதி வேலையாக திருப்பூர் சென்று விட்டு மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தந்தை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தையை பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது அவரை தந்தை ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் காமராஜர் நகர் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிக்கச் சென்றது தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து ஆனந்தராஜ் உறவினர்களுடன் தந்தையை கீழ்பவானி வாய்க்காலில் தேடிப் பார்த்தார். ஆனால் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காமராஜ் நகர் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கொள்ளுககாட்டிபாளையத்திற்கு மேற்புறம் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் உள்ள மரக்கிளையில் கண்ணப்பன் உடல் சிக்கி இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆனந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடப்பது தனது தந்தை என உறுதி செய்தார்.

Advertisment

இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சம்பவம் நடந்த அன்று கண்ணப்பன் குளித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது.