
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கிவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (23.10.2021) இரவு ஒரு மர்ம நபர் செல்ஃபோனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவர் கூறும்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து நிமிடங்களில் வெடித்துவிடும் என்று மிரட்டல் குரலில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவுக்கு தகவலைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பேரில், ஃபோனில் பேசிய மர்ம நபர் பேசும்போது போதையில் பேசியதாக சந்தேகமடைந்த போலீசார் அவரது செல்ஃபோன் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை செய்துவந்தனர். அவர்களது விசாரணையில், திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அஜய் (23) என்பவர்தான் செல்ஃபோன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி போன்ற வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் தெரியாமல் மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, போலீசார் அஜித் மீது வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)