Tragedy befell the one who asked to turn down the sound Auto driver arrested

ரேடியோ சவுண்டை குறைக்க சொன்னதால் கட்டையால் அடித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை திருவெல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதியில் பாதுகாவலராக பணியாற்றும் தம்பிராஜன் என்பவரும், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார் என்பவரும் தங்கி இருந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் கடந்த 22 ஆம் தேதி (22.07.2024) அய்யனார் ரேடியோவில் அதிக சத்தத்தை வைத்து பாடல்களை கேட்டுள்ளார். அப்போது தம்பிராஜன், அய்யனாரிடம் ரேடியோ சத்தத்தை குறைக்க சொல்லியுள்ளார். இருப்பினும் அய்யனார் ரேடியோ சத்ததை குறைக்காமல் பாடல் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனையடுத்து அய்யனார், தம்பிராஜனை கட்டையால் தாக்கியுள்ளார். இந்த மோதலில் படுகாயமடைந்த தம்பிராஜன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தம்பிராஜன் சிகிச்சை பலனின்றி இன்று (25.07.2024) மருத்துவமனையில் உயிரிழந்தார். அதே சமயம் இந்தச் சம்பவம் தொடர்பாக அய்யனாரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.