தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 63 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா உறுதி செய்யப்பட்டோர்எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,182 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை 60,533 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 37 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 26 பேரும்கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 50 வயதுக்குட்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கும் 60 வயதிற்கும்இடைப்பட்டோரில்25 பேர் கரோனாபாதிப்பால் இறந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பில்லாத 8 பேர் இன்று கரோனவால் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கரோனாவால் இதுவரை 335 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்சமாக929 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில்94 பேரும், திருவள்ளூரில் 74பேரும், காஞ்சிபுரத்தில் 23 பேரும், மதுரையில் 39 பேரும், விழுப்புரத்தில் 15 பேரும்இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் 32 ஆவது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் உயிரிழந்த பதிவாகி வருகிறது. ஒரே நாளில் 2,852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதேபோல் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 52,926 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று மதுரையில் 297பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.அதேபோல் செங்கல்பட்டில் 226,சேலத்தில் 178, திருவள்ளூரில் 147, ராமநாதபுரத்தில் 111, காஞ்சிபுரம் 86,வேலூரில் 76,விருதுநகர் 45, திருவண்ணாமலையில் 39, திண்டுக்கல்லில் 35,தேனியில் 33,நெல்லை 32,திருச்சியில்31 பேருக்கும்கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.