TNPSC Group - 4 Exam Date Notification

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த குரூப் - 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்ரவரி 28 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதே சமயம் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை என 3 நாள்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குரூப் - 4 தேர்வானது ஜூன் 9 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் தேர்வு தொடர்பான முழு விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2024 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேர்வுக்கான முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.