தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தளர்வற்ற முழு பொது முடக்கம் அமலுக்கு வந்தது.

Advertisment

தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், மாநில எல்லைகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

முழு ஊரடங்கு காரணமாக, சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் பொதுமக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல், அனைத்து தெருக்களும் வெறிச்சோடின.