Skip to main content

15 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட வணிக உதவியாளர்!

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
tn govt officer arrested for taking 15 thousand bribe

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் அந்தோணி (வயது 46). இவர் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்த முறையில் செய்து கொடுத்து வருகிறார். அந்த வகையில், திருச்சி கிராப்பட்டியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகளை செய்து கொடுக்க ஒப்பந்தம் செய்து கொண்டு அதற்கான வேலைகளை செய்து வந்தார். அந்த வீட்டிற்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர், இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழகம் அலுவலகத்தை அணுகி அங்கிருந்த வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் கூறியதன் பேரில், ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி உள்ளார்.

அதன் பிறகு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள வணிக உதவியாளர் அன்பழகன் என்பவர் இடத்தினை பார்வையிட்டு எஸ்டிமேட் தயார் செய்து கொடுத்துவிட்டு 35 ஆயிரம் ரூபாய் ஆன்லைனில் கட்டணம் செலுத்துமாறு அந்தோணியிடம் கூறியுள்ளார். அதன் பேரில் அந்தோணி உயிர் மின்னழுத்த கம்பத்தை மாற்றி அமைப்பதற்கு 35 ஆயிரம் கட்டணம் ஆன்லைன் மூலம் 15.4.2024 அன்று செலுத்திவிட்டு அதன் ரசீதினை, எடுத்துக் கொண்டு வணிக உதவியாளர் அன்பழகன் இடம் கொடுத்துள்ளார்.  அதற்கு அன்பழகன் ஒரு மாதம் கழித்து தன்னை வந்து பார்க்க வேண்டுமாறு கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,  அந்தோணி நேற்று (27.5.24) காலை சுமார் 11.30 மணி அளவில் மேற்படி அன்பழகனை கிராபட்டியில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து மின் கம்பம் மாற்றம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் உங்க வேலை முடிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் கொடுத்தீர்கள் என்றால் சீக்கிரமே முடித்துக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு அந்தோணி தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என்று கூறியதன் பேரில் அன்பழகன் ஐயாயிரம் குறைத்துக் கொண்டு,  15 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே உங்களது வேலையை செய்து தர முடியும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்தோணி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை வந்து காவல்துறை கண்காணிப்பாளர் மணிகண்டனிடம் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் இன்று (28.5.2024) காலை 11 மணியளவில் அந்தோணியிடமிருந்து அன்பழகன் லஞ்சமாக 15,000 பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.  உதவி செயற்பொறியாளர் அலுவலகம், இயக்கலும் காத்தலும், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிரமான கழகம், கிராப்பட்டி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் தீவிர விசாரணை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Serious investigation of the arrested illicit

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளச்சாரயா வியாபாரிகள் கண்ணுகுட்டி(எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா‌,‌ அவரது தம்பி தாமோதரன் உள்ளிட்ட 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.