பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகம் 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் சென்னை பெருங்குடியில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அமேசான் நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். இவ்விழாவில் முதல்வருடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜும் கலந்து கொண்டார். தமிழகத்தில் இதன் மூலம் அமேசான் நிறுவனம் தனது 4 வது அலுவலகத்தை திறந்துள்ளது. புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தின் மூலம் கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் (படங்கள்)
Advertisment