Skip to main content

கள்ளக்குறிச்சியில் த.மு.மு.க சார்பில் கருஞ்சட்டை அணிந்து கண்டன போராட்டம்!

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

TMMK wore Black shirt for babar masjid at kallakurichi

 

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சில தினங்களுக்குமுன் லக்னோ சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பில் அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி உட்பட 32 பேரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். 

 

அதில் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையிலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு தமிழ்நாடு முஸ்ஸிம் முன்னேற்றக்கழகம் சார்பில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், ‘பாபர் மஸ்ஜித் இடிப்பு குற்றவாளிகளை குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் விடுதலை செய்திருப்பது கண்டனத்துக்குரியது’ என போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க. - த.ம.மு.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
BJP  TMMK. Alliance agreement signed between

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (20.03.2024) தொடங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே சமயம் பா.ஜ.க. தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அ.ம.மு.க.விற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டி.டி.வி. தினகரன் வரும் 24 ஆம் தேதி தேனியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கையெழுத்திட்டார். அதில், “2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கர்நாடகத் தேர்தல் பிரசாரம்; மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிய அசாம் முதல்வர்

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

assam cm himanta biswa sarma speech in karnataka 

 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. பாஜகவின் தேசியத் தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். மேலும், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் ஆட்சியைத் தக்கவைக்க தீவிரப் பிரச்சாரங்களையும் பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்து தலைவர்கள் உரையாற்றுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி 5 முறை கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில், கடந்த 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 118 கி.மீ. தொலைவுடைய பெங்களூரு முதல் மைசூர் வரையிலான 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு விழா மேடையில் பேசும்போது, “என்னை கல்லறை தோண்டி புதைக்க நினைக்கிறது காங்கிரஸ்” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா பேசுகையில், "கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும். நமக்கு பாபர் மசூதி தேவை இல்லை. ராமஜென்ம பூமி தான் வேண்டும். லண்டனில் ராகுல் காந்தி பேசிய போது இந்தியாவை இழிவு செய்ய முயற்சி செய்தார். மோடி இருக்கும் வரை ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது" என்று பேசினார். அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஷ்வா ஷர்மாவின் இந்த பேச்சு மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் இணையவாசிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.