
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 'விடியலை நோக்கி ஸ்டாலினின்குரல்' என்ற தேர்தல் பரப்புரைபயணத்தை தமிழகம் முழுக்க நடத்தி வருவதோடு,'அ.தி.மு.க.வை நிராகரிப்போம்' என்றதலைப்பில் நடைபெறும் கிராமசபைக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில் 24- ஆம்தேதி, அரியலூர் மாவட்டத்தில், சுற்றுப்பயணம் செய்யும்போது திருமானூர் என்ற இடத்தில், அவர் கலந்துகொள்ளஏற்பாடு செய்யப்பட்டிருந்தஊராட்சிக்குசொந்தமானமேடையின் மேற்பரப்பில், த.மா.கா. நிறுவனத் தலைவர் 'மூப்பனார் அரங்கம்' என்ற பெயர்மறைக்கப்பட்டிருந்தது. இதனால் த.மா.கா. நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் வந்த வாகனத்தை மறித்து,எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்.அவர்களைப் பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினார்கள். இந்தச் சம்பவத்திற்கு கண்டனக்குரல்கள் உருவான நிலையில், த.மா.கா. இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா தி.மு.க.வின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அரியலூர் மாவட்டம் திருமானூரில் ஜி.கே.மூப்பனாரின்பாராளுமன்ற நிதியில் அரங்க மேடை அமைக்கப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கிராமப் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைக்கு இந்த இடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இன்று (24.12.2020) அத்தகைய அரங்க மேடையை, உதயநிதி வருகிறார் என்ற ஒரு காரணத்திற்காக அவசர அவசரமாக யூனியன் சேர்மன் நிதியில் வேலைபார்த்துக் கட்டியதுபோல், அரங்க மேடையின் பெயரான 'ஜி.கே.மூப்பனார் அரங்கம்' என்ற பெயரை அழித்துவிட்டார்கள்.ஆட்சிக்கு வருமுன்பே அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.க.வை கண்டித்தும், தி.மு.க. இளைஞரணித் தலைவர் உதயநிதி வாகனத்தை த.மா.கா. மாணவரணி மாநிலத் துணைத் தலைவர் மனோஜ் மற்றும் ஜோதிமணி ஆகியோர் தலைமையில் மறித்து த.மா.கா.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும்,இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.க.வை த.மா.கா. இளைஞரணி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார். மேலும்,இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் தி.மு.க வை த.மா.கா இளைஞரணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்." என கூறியிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள எங்களுக்கும் அரசியல் செய்து 'களத்தில் உள்ளேன் ஐயா'எனக்காண்பிப்பதுபோல் இந்த செயல் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)