Skip to main content

பிரசவம் முடிந்து மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது நேர்ந்த சோகம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

​    ​tiruvannamalai family chennai return kanchipuram car incident 

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சே.நாச்சியார்பட்டு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் (வயது 40). இவருக்கு ரத்னா (வயது 32) என்ற மனைவியும், இத்தம்பதியருக்கு ராஜலட்சுமி (வயது 5) மற்றும் தேஜா ஸ்ரீ (வயது 2) மற்றும் 3 மாத ஆண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளது. இதற்கிடையில் மூன்றாவது பிரசவத்திற்கு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரத்னா சென்றுள்ளார். பிரசவத்திற்குப் பிறகு தனது பிள்ளைகளுடன் தனது தாய் வீட்டில் ரத்னா இருந்துள்ளார்.

 

இந்நிலையில் ராமஜெயம் திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டிற்கு மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக சென்னை சென்றுள்ளார். அதன் பின்னர் தனது குடும்பத்தினரையும், உறவினரான ராஜேஷ் (வயது 29) என்பவரையும் அழைத்துக்கொண்டு காரில் நேற்று முன்தினம் இரவு சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அருகே சித்தேரிமேடு என்ற பகுதியில் வந்தபோது இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்னா மற்றும் அவரது 2 பெண் குழந்தைகள், உறவினரான ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்த ராமஜெயம் மற்றும் அவரது 3 மாத ஆண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் 3 மூன்று மாத ஆண் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுவன் கடத்தல் சம்பவம்; ஐ.ஏ.எஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Kidnapping incident; Ex-wife of IAS

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் எஸ்.எஸ் காலனி, விவேகானந்தர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி ராஜேந்திரன். இவருடைய 14 வயது மகன் மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால் தான் சிறுவனை விடுவோம். இல்லையெனில் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விட்டனர்.

உடனடியாக இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.எஸ் காலனி காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையின் அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் செந்தில்குமார், ரவுடி அப்துல் காதர், காளிராஜ், வீரமணி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தை நிகழ்த்திய முக்கிய நபர்களான ஹைகோர்ட் மகாராஜன் மற்றும் சூர்யா என்ற ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவியையும் போலீசார் தேடி வந்தனர்.

இருவரும் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க தப்பி பெங்களூரில் பதுங்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரில் இருந்து குஜராத் சென்ற நிலையில் சூர்யா குஜராத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவின் மரணம் குறித்து விசாரிக்கத் தனிப்படை போலீசார் தற்போது குஜராத்துக்கு விரைந்துள்ளனர். சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியின் முன்னாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Story

மாமண்டூரில் பழைய கற்கால ஆயுதம் கண்டெடுப்பு

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
Paleolithic weapon discovery at Mamandur

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை மேற்பார்வையில் இயங்கும் தொல்லியல் கழகம், விழுப்புரம் உமா கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து, காஞ்சி சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஐந்து நாட்கள் கல்வெட்டு பயிலரங்கம்  தமிழ்த்துறை தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

பயிலரங்கத்தின் கடைசி நாளில் திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் மற்றும் கூழமந்தல் ஆகிய ஊர்களுக்கு கல்வெட்டு பயிற்சியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள், முதுகலை மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என  சுமார் 40 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் ஆகியோர்  களப்பயணம் மேற்கொண்டனர்.

Paleolithic weapon discovery at Mamandur

மாமண்டூர் குடைவரையில் களப்பயணம் மேற்கொண்டபோது 4-வது ஆக உள்ள குடைவரையை பார்வையிட்டு கீழே இறங்கும் போது மலை அருகே கற்கால கருவி ஒன்றை  கல்வெட்டு பயிலரங்கத்தில் கலந்து கொண்ட விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் இம்மானுவேல் கண்டறிந்தார். இதனை ஆய்வு செய்ததில் அவை பழைய கற்கால கருவி என தெரியவந்தது என அவர் தெரிவித்தார்.

குடைவரைக்கு பின் பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டைகளும் உள்ளன எனவே இந்த ஆதாரங்கள்  மூலம் அப்பகுதியில் பழைய கற்கால மனிதன் வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது என்று கூறினார்.