புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 4-ஆவது புத்தகத் திருவிழா எதிர் வரும் பிப்ரவரி 14 முதல் 23-ஆம் தேதிவரை நகர்மன்ற வளாகத்தில் நடைபெற உள்ளது. புத்தகத் திருவிழாவின் அவசியத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Advertisment

book

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

குறிப்பிட்ட பாட வேளையில் பாடப்புத்தகத்தைத் தாண்டி கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட புத்தகங்களை மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து வாசித்தனர். கந்தர்வகோட்டை அரசுப் பள்ளியில் அமைதிப் புறா வடிவில் மாணவர்கள் அமர்ந்து வாசித்தனர். புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலர் கே.எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

Advertisment

சிறப்பு விருந்தினராக வாசிப்பு இயக்கத்தில் கலந்துகொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் பேசும்போது, நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது, எனது நண்பர் கன்னிமரா நூலகத்திலிருந்து நிறைய புத்தகங்களை எடுத்துவந்து படிப்பார். இப்படி படித்துக்கொண்டே இருக்கிறாரே என ஆச்சர்யமாக இருக்கும். அவரிடம் நெருங்கிப் பழகியபிறகுதான் நானும் வாசிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொண்டேன்.

புதிய விசயங்களைக் கற்றுக்கொண்டே இருப்பவன் தொடர்ந்து இளமையாகவே இருக்கிறான். தினமும் ஒரு புத்தகம், இரண்டு நாளைக்கு ஒரு புத்தகம், வாரத்திற்கு புத்தகம் என வாசிப்பவர்கள் உள்ளனர். மாணர்களாகிய நீங்கள் குறைந்தது மாதத்திற்கு ஒரு புத்தகத்தையாவது பாடத்திட்டத்தைத் தாண்டி வாசிக்க வேண்டும். வேறு எந்தப் புத்தகத்தையும் வாசிக்க முடியாதவர்கள் திருக்குறளை மட்டுமாவது அவசியம் வாசிக்க வேண்டும். தினந்தோறும் ஒரு குறளையாவது வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும்.

சாதாரண எளிய குடும்பத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த அம்பேத்தகர் உலகமே வியக்கும் அளவுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். 70 ஆண்டுகளைக் கடந்தும் நமது அரசியல் சாசனம் வேறு எந்த நாட்டு சட்டங்களைவிடமும் சிறப்பாக இருக்கிறது என்றால் அம்பேத்கரின் அளப்பரிய பங்கை யாரும் மறுக்க முடியாது. இதற்கு அம்பேத்கரின் அயராத வாசிப்பே காரணமாக இருந்தது. சிறந்த நூல்களை வாசிக்கும் பழக்கம் இருந்தால் நீங்களும் வருங்காலத்தில் மாமேதையாக உருவாகலாம் என்றார்.

Advertisment

book

புத்தகத்திருவிழாவின் நோக்கம் குறித்து கவிஞர் நா.முத்துநிலவன் பேசினார். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் அ.மணவாளன், க.சதாசிவம், ம.வீரமுத்து, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், மற்றும் ராசி.பன்னீர்செல்வம், பேரா.விஸ்வநாதன், சு.மதியழகன், புதுகை செல்வா, புதுகை புதல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக தலைமை ஆசிரியர் ஏ.பெட்லாராணி வரவேற்க, ஆசிரியர் கமலம் நன்றி கூறினார்.