Tipper lorry  accident! Two passed away

கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கரூர் அடுத்த தான்தோன்றிமலை பகுதியில் வசித்து வருகிறார். இவர், வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று பாலவிடுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் அவரது மனைவியின் தாய் சுசிலா ஆகியோர் இருசக்கரவாகனத்தில் சென்று விட்டு, இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வெள்ளியணை அருகே வந்து கொண்டிருந்தபோது கிரானைட் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியும் இவர்களது இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் இருவரும் மாட்டி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

உயிரிழந்த கனகராஜ் மற்றும் சுசிலா ஆகியோரின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.